காசாவை முற்றுகையிடும் திட்டத்தை பகிரங்கப்படுத்தியது இஸ்ரேல்!
கசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பை முற்றாக ஒழித்ததன் பின்னர் அதன் மொத்த ஆட்சியையும் இஸ்ரேல் தன்வசம் வைத்துக்கொள்ளும் திட்டத்தை தற்போது பகிரங்கமாக அறிவித்துள்ளது.
காசாவின் எதிர்கால ஆட்சி குறித்த திட்டங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட போதே இந்த விடயம் அவர்களால் முன்மொழியப்பட்டது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் இஸ்ரேலே தக்கவைத்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் இராஜாங்க செயலரான அன்டனி பளிங்கன் இவ்வார இறுதியில் மீண்டும் இஸ்ரேல் உட்பட மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
அதன்படி, காசாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் இஸ்ரேலே வைத்துக்கொள்ளும் என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனியர்கள் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளா விட்டாலும் இதுவே தமது திட்டம் என்பதை இஸ்ரேல் திட்டவட்டமாக்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது காசாவில் உள்ள பலஸ்தீனியர்களை குடியகழ வைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விவரங்களை இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சியில் காண்க