ஈரானை தாக்கத் தயாராகிறது இஸ்ரேல்?
attack
iran
israel
By Vanan
உலக ஊடகங்களின் பார்வைகள் அனைத்தும் தென் சீனக் கடற்பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கும் - சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள போர்பதற்றம் பக்கம் நின்றுகொண்டிருக்க,
கருமையானதொரு யுத்த மேகம் இஸ்ரேலையும், ஈரானையும் மெதுமெதுவாக சூழ்ந்துகொண்டிருக்கிறது. ஈரான் மீது ஒருவகை மறைமுக யுத்தத்தை ஆரம்பித்து விட்டுள்ள இஸ்ரேல், நேரடி யுத்தத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சில போரியலாளர்கள் கூறுகின்றனர்.
இருந்தாலும், பதிலுக்கு ஈரானும் அணு ஆயுத தயார்படுத்தல்களுடன் உலகின் முக்கிய சக்திகளை சந்திக்க தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இவ்வாறு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வருகின்ற பலப்பரீட்சை தொடர்பில் ஆராய்கிறது இன்றைய உண்மையின் தரிசனம்,,,,