ட்ரம்பின் காசா அமைதிதிட்டத்தை அடியோடு நிராகரித்தார் நெதன்யாகு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச காசா திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரபூர்வமாக நிராகரித்துள்ளார்.
காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை "முழுமையாக நிராயுதபாணியாக்க" ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக ட்ரம்பின் அமைதி மன்றம் கடந்த மாதம் தெரிவித்திருந்தது.
ஹமாஸின் அறிவிப்பு
இருப்பினும், இஸ்ரேல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவந்து, காசா பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றால் மட்டுமே, தனது கனரக ஆயுதங்களை ஒப்படைப்பது நிபந்தனைக்குட்பட்டது என்று ஹமாஸ் கூறியுள்ளது.

கடந்த ஒக்டோபரில் காசா பகுதியில் ஒரு அடிப்படை போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, இஸ்ரேல் அப்பகுதி மீது தொடர்ந்து குண்டுவீசி வருகிறது.
15 அம்ச ஆவணத்தை நிராகரிக்கிறோம்
"இந்த 15 அம்ச ஆவணத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று நெதன்யாகு இன்று (09) நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினார்.

"ஹமாஸ் உண்மையாகவே ஆயுதங்களைக் கைவிடும் வரை இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்காது, மேலும் நமது படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து தடுக்கும்," என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாடொன்றில் காட்டுக்குள் வீழ்ந்து தீப்பிடித்த உலங்கு வானூர்தி : பயணித்த சுற்றுலா பயணிகளுக்க நேர்ந்த துயரம்
ஒரு முக்கிய நடவடிக்கை
காசா பகுதிக்கான ஆயுதக் களைவுத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, "நீடித்த அமைதி மற்றும் பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கை" என ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்தார்.

ஆனால், காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்பு ஹமாஸிடமிருந்து ஆயுதங்களைக் களைய வேண்டும் என்றும், அது வெறும் போலியான ஆயுதக் களைவாக இருக்க முடியாது என்றும் நெதன்யாகு வலியுறுத்தினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |