பலஸ்தீன கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்
காசா (Gaza) போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட உள்ள 250 பலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் (Israel) வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஒப்பந்தத்தின்படி 250 பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கான பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இந்த 250 பேரும் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைக் கைதி
இஸ்ரேல் விடுவிக்கும் 250 கைதிகளுக்கு ஈடாக, காசாவில் உயிருடன் இருக்கும் 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 250 பேரை தவிர கடந்த 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலில் தொடர்பில்லாத காசாவில் இருந்து கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 1,700 கைதிகளையும் இஸ்ரேல் விடுவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முக்கிய தலைவர்
மொத்தமாக விடுவிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1,950 ஆகும் ஆனால் ஹமாஸ் கோரியுள்ள முக்கிய தலைவர்களான மர்வன் பர்கவுதி மற்றும் அஹ்மத் சாடத் ஆகியோரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, 360 காசா பயங்கரவாதிகளின் உடல்களையும் இஸ்ரேல் திருப்பி அனுப்பும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாசை வழிநடத்தி இஸ்ரேலால் கொல்லப்பட்ட சகோதரர்களான யஹ்யா மற்றும் முகமது சின்வார் ஆகியோரின் உடல்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஹமாஸின் கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
