மிகவும் ஆபத்தான பாதையில் நகரும் இஸ்ரேல்: மொசாட் உளவாளிகள் கூறும் அதிர்ச்சித் தகவல்
இஸ்ரேல் மிகவும் தவறான பாதையை நோக்கி பயணித்து கொண்டிருப்பதாக முன்னாள் மொசாட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தை முன்னாள் மொசாட் அதிகாரியான ராமி இக்ரா (Rami Igra) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் ஜெனரலும் இஸ்ரேலிய அரசியல்வாதியுமான உசி தயான் (Uzi Dayan) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இஸ்ரேல் என்ற முழு தேசமுமே ஒரு இராணுவ இயந்திரமாக மாறி இஸ்ரேலின் வெற்றியை நோக்கி அது நகர்ந்து கொண்டிருப்பதாக உலகமே நம்பிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இது மிகவும் தவறாக பாதை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் ஆபத்துக்கள் நிறைந்த பயணம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலின் இராணுவ வியூகங்கள் மற்றும் இஸ்ரேல் குறித்து அவர்கள் முன்வைத்த விமர்சனங்கள் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |