இஸ்ரேலின் கொடூர தாக்குதல்: காஸாவில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் பலி
போர்நிறுத்ததை மீறி காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், ஹமாஸ் கிளர்ச்சிப்படை மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.
இராணுவ வீரர்
இருப்பினும், ஹமாஸ் படைகள் போர்நிறுத்ததை மீறியதாக தெரிவித்து இஸ்ரேல் படைகள் காஸா மீதான தாக்குதலை தொடர்ந்து நடத்தி வந்தன.

இதையடுத்து, ரஃபா பகுதியில் நேற்று (28) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், காஸா மீது தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
பயங்கர தாக்குதல்
இந்த நிலையில், காஸா மீது நேற்று (28) இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் இராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், 46 குழந்தைகள் உள்பட 104 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு, 253 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய தாக்குதல்
இருப்பினும், போர்நிறுத்ததை மீறியதாகக் கூறப்படும் இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் படை மறுத்துள்ளது.

இந்தத் தாக்குதலானது, கடந்த ஒக்டோபர் பத்தாம் திகதி முதல், காஸா மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன், இஸ்ரேலின் இராணுவ வீரர் கொல்லப்பட்டதால், காஸா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 12 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்