ரபா மீதான தாக்குதலை ஆரம்பித்தது இஸ்ரேல்
Israel-Hamas War
Gaza
By Sumithiran
ஹமாஸ் அமைப்பு போர்நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ள நிலையில் பலஸ்தீன மக்கள் இடம்பெயர்ந்துள்ள ரபா மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
கிழக்கு ரஃபாவில் ஹமாஸுக்கு எதிராக இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்துவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் பற்றிய மேலதிக விவரங்களை விரைவில் தருவதாக படைத்தரப்பு உறுதியளித்துள்ளது
வான்வழித் தாக்குதல்கள்
ரஃபாவின் கிழக்குப் பகுதியில் வான்வழித் தாக்குதல்கள் நடப்பதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
போர்ப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிக தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து காயங்கள் பற்றிய தகவல்கள்
ரஃபாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து காயங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி