ஈரான் போரின் எதிரொலி! இஸ்ரேலின் புதிய போர் விமானப்படை பிரிவுகள்
ஈரானுக்கு எதிரான போரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு புதிய போர் விமானப்படைப் பிரிவுகளை வாங்குவதற்கான திட்டங்களுக்கு இஸ்ரேலின் அமைச்சரவை கொள்முதல் குழு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த புதிய படைப்பிரிவுகளில் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் எஃப்-35 (F-35) மற்றும் போயிங் நிறுவனத்தின் எஃப்-15ஐஏ (F-15IA) ரக போர் விமானங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஒப்பந்தத்தின் மதிப்பு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இலக்கு
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களின் படிப்பினைகள், நாட்டின் பாதுகாப்புப் படையினரின் பலத்தை துரிதமாக அதிகரிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிரிகளை விட ஒரு படி முன்னால் இருப்பதே தமது இலக்கு என்று கூறியுள்ளார்.

Image Credit: BSS
மேலும், நாட்டைப் பாதுகாப்பதற்காக அடுத்த பத்தாண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள 350 பில்லியன் இஸ்ரேலிய ஷெக்கல் (சுமார் 118.9 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்பிலான பாதுகாப்புப் பலப்படுத்துதல் திட்டத்தின் முதற்படியே இந்த போர் விமான கொள்முதல் அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |