அமைதியான வாழ்க்கை வேண்டுமென்றால்... காசாவை எச்சரிக்கும் இஸ்ரேல்
அமைதியான வாழ்க்கை மற்றும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்றால் காசா பகுதியில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் தொடர்பில் தகவல்கள் பகிருமாரு இஸ்ரேல் பாதுகாப்பு படை பலஸ்தின மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 7 ஆம் திகதி காசாவை சேர்ந்த ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி பலரை கொலை செய்ததோடு 216 பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து 19 நாட்களாகவும் போர் நடைபெற்று வரும் நிலையில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நம்பக தன்மைக்கு உத்தரவாதம்
இந்தநிலையில், அமைதியான வாழ்க்கை மற்றும் உங்களுடைய குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலம் என்பது உங்களுடைய விருப்பம் என்றால், உடனடியாக மனிதநேய நலன்களுக்கான விடயங்களை செய்யுமாறும், உங்கள் பகுதிகளில் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகளை பற்றிய ஆராயப்பட்ட மற்றும் மதிப்புமிக்க தகவலை பகிருங்கள் எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா மக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மேலும், காசா மக்களின் வீடுகளுக்கு அதிக பாதுகாப்பு வழங்குவதற்கான முயற்சியை மேற்கொள்வதாக இஸ்ரேல் இராணுவம் உறுதி அளித்துள்ளதுடன் நிதி சார்ந்த பரிசுகளை வழங்கவதாகவும் முழுமையான நம்பக தன்மைக்கு உத்தரவாதம் தருவதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
அதேவேளை, பணயக்கைதிகள் தொடர்பில் தகவல்கள் யாரேனும் வைத்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் தொடர்பு கொள்வதற்கான விவரங்களையும் இஸ்ரேல் இராணுவம் பகிர்ந்துள்ளது.