சரணடையவேண்டும் அல்லது சாகவேண்டும்: ஹமாஸ் அமைப்பிற்கு இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தளபதிகள்,உறுப்பினர்கள் ஆகியோர் சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும். 3-வது வாய்ப்பு இல்லை.” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரணடைபவர்களின் உயிர்கள் காக்கப்படும்
கடந்த சில நாட்களாக ஹமாஸ் அமைப்பினர் சரண் அடைந்துள்ளனர். இது பயங்கரவாத குழுவிற்கு என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறது.யாரெல்லாம் சரண் அடைகிறார்களோ அவர்களது உயிர்கள் காக்கப்படும்.
“காசாவில் ஹமாஸிற்கு எதிரான போர், எங்களுடைய இலக்கை அடைந்த பின்னர் முடிவுக்கு வரும். காசாவின் வடக்கு முனையில் ஹமாஸின் ஜபாலியா, ஷெஜையா பட்டாலியன் அகற்றப்படும் தறுவாயில் உள்ளது.
பிணைக்கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பு
அமெரிக்கா கேட்கும் மற்றும் சொல்லும் அனைத்தையும் நான் கருத்தில் கொள்கிறேன். மேலும் அமெரிக்கா செய்து கொண்டிருப்பதை அனைத்து அமைச்சர்களுடன் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். அமெரிக்கா எங்களுக்கு உதவுவதற்கான அனைத்து வழிகளையும் காண்போம்.
நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல் (காணொளி)
நாங்கள் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து நெருக்கடி கொடுத்தால், அங்கிருந்து பிணைக்கைதிகளை விடுவிக்கும் வகையில் வாய்ப்புகள் வழங்கப்படும் என நம்புகிறேன். அப்படி அவர்கள் தெரிவித்தால், அதுகுறித்து நாங்கள் யோசிப்போம் என மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |