இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் போராளி குழுவின் தலைவர் பலி (காணொளி)
காசா பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் போராளி குழுவின் தலைவர் அப்துல்லா அபு ஷலால் கொல்லப்பட்டார்.
ஜூட் மற்றும் சமரியா ஆகிய பகுதிகளில் பல முக்கிய உட்கட்டமைப்புகளில் ஒன்றை அமைத்தவர்களில் முக்கிய பொறுப்பு அப்துல்லாவுக்கு உள்ளது என்று இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பல தாக்குதல்களை
கடந்த காலங்களில் பல தாக்குதல்களை அவர் நடத்தியிருக்கிறார். அவற்றில், கடந்த ஏப்ரலில் ஜெருசலேமில், ஷிமோன் ஹத்ஜடிக் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலும் ஒன்றாகும். இதில் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்தனர்.
இதுதவிர, கடந்த ஒக்டோபரில் இஸ்ரேல் படைக்கு எதிராக நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் இவரே பொறுப்பாவார். இதில் வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டது.
ஈரான் நாட்டில் உள்ள சிலரிடம் இருந்து நிதியுதவி
அப்துல்லா தலைமையிலான அமைப்புக்கு ஈரான் நாட்டில் உள்ள சிலரிடம் இருந்து நிதியுதவி மற்றும் உத்தரவுகள் வருகின்றன என்றும் இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |