வருடத்தின் முதல் 15 நாட்களில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள் : முதலிடம் பிடித்த புடினின் தேசம்
2024 ஆம் ஆண்டு பிறந்து முதல் 15 நாட்களில் இலங்கைக்கு 101,362 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடம்(2023) ஜனவரி மாதம் முழுமையாக வந்த 102,545 சுற்றுலா பயணிகளை விட 114 வீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாதாரிகளின் வருகையால் அதிக மகிழ்ச்சி
வாராந்திர வருகை சராசரியாக 46,000 ஆகவும், தினசரி வருகை சராசரியாக 6,700 ஆகவும் உள்ளது. “கடந்த இரண்டு வருடங்கள் சவாலானதாக இருந்ததுடன் தற்போது சுற்றுலாதாரிகளின் அதிகரித்த வருகையால் இலங்கை சுற்றுலாத் துறையைச் சேர்ந்த நாங்கள், அதிக மகிழ்ச்சி அடைகிறோம்”. “சுற்றுலா வருகை எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வருமானமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்த செயல்திறன் அதிகரிப்பு தொழில்துறைக்கு நல்லதொரு உலகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று சுற்றுலாதுறை தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
நிரம்பி வழியும் ஹோட்டல்கள்
நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் சுமார் 75 சதவீதம் சுற்றுலா தாரிகளால் நிரம்பி வழிகின்றன. மேலும் மார்ச் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரியில் இதுவரை, அதிக சுற்றுலாதாரிகள் வருகை செய்த நாடாக ரஷ்யா திகழ்கிறது., இது மொத்த வருகையில் 16 சதவீதம் ஆகும். இரண்டாவது இடத்தில் இருப்பது அண்டை நாடான இந்தியா, ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 15 சதவீதத்தைக் கொண்டு வருகிறது.
ஐக்கிய இராச்சியம் இலங்கை சுற்றுலாவிற்கு மூன்றாவது பெரிய ஆதார சந்தையாக தரவரிசையில் உள்ளது, வருகையில் 8 சதவீதத்தை கொண்டுள்ளது. மற்ற முக்கிய சந்தைகளில் ஜெர்மனி, சீனா, பிரான்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |