இஸ்ரேல் விமான தாக்குதல் : ஊடகவியலாளர் குடும்பத்துடன் பலியான சோகம்
காசாவின் மத்திய பகுதியில் உள்ள Nuseirat அகதி முகாம் மீது இன்று சனிக்கிழமை அதிகாலைவேளை இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர் உட்பட அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான WAFA வெளியிட்ட தகவலின்படி மத்திய காசா பகுதியில் உள்ள ஊடகவியலாளரான ஜாபர் அபு ஹிட்ரிஸ் வீட்டின்மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.
106 ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் படுகொலை
இஸ்ரேல் காசா பகுதியில் தாக்குதல்களை தொடங்கியதிலிருந்து பாலஸ்தீன ஊடகவியலாளர்களை குறிவைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகத்தின்படி, ஒக்டோபர் 7 முதல் 106 ஊடகவியலாளர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் கொல்லப்பட்டுள்ளனர்.
Palestinian journalist Jaber Abu Hidris was killed along with a number of his family members in the bombing of his house in the Nuseirat refugee camp, on Friday night.
— The Palestine Chronicle (@PalestineChron) December 30, 2023
With Abu Hidris' killing, the number of Palestinian journalists killed since the beginning of the Israeli… pic.twitter.com/K1Qm9Du2ze
24 மணிநேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொலை
முற்றுகையிடப்பட்டுள்ள காசா பகுதியின் மத்திய பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 100 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகவும் 158 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் சனிக்கிழமை காலை அல்-ஜசீராவிடம் தெரிவித்தன.
Scores of Palestinians were killed and wounded as Israel continued its aerial, ground and sea bombardment in various parts of the Gaza Strip for the 85th day in a row. https://t.co/mGFbuocLxn pic.twitter.com/nE2weqpkZ6
— The Palestine Chronicle (@PalestineChron) December 30, 2023
காசாவின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கி காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலையில் 21,507 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 55,915 பேர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச மதிப்பீடுகள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று கூறுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |