காசாவில் இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பு
காசாவில் தரைத் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் இராணுவத்திற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செவ்வாய்க்கிழமை முதல் இடம்பெற்று வரும் மோதலில் 16 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் இழப்பு
இன்று காலை 11 இராணுவத்தினரே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் வெளியிட்ட அறிவிப்பு இஸ்ரேல் இராணுவத்தின் இழப்பில் அதிகரிப்பை காட்டியுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹமாஸ் அமைப்புடனான மோதலில் இதுவரை 320 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் படைத்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே ஜெருசலேமில் உள்ள மவுண்ட் ஹெர்சல் இராணுவ கல்லறையில், வடக்கு காசா பகுதியில் நேற்று நடந்த தரைச் சண்டையில் கொல்லப்பட்ட இஸ்ரேல் இராணுவ வீரர் லாவி லிப்ஷிட்ஸ் (20) ன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.
"வேதனைக்குரிய இழப்புகள்"
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று 11 வீரர்கள் இறந்ததை அடுத்து இதனை"வேதனைக்குரிய இழப்புகள்" என தெரிவித்திருந்தார். "எங்கள் வீட்டிற்கான போரில் எங்கள் வீரர்கள் ஒரு நியாயமான போரில் வீழ்ந்தனர், " என்று நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
படங்கள் : ரொய்ட்டர்ஸ்