காசாவில் இஸ்ரேலின் கோர தாக்குதல்: 22 பேர் பலி
காசா (Gaza) பகுதியில் இஸ்ரேல் (Israel) இராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக என காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் (Hamas) அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
கட்டளை மற்றும் கட்டுப்பாடு
இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், ஒப்பந்த அடிப்படையில் 105 பிணைக்கைதிகளை மீட்டது.
இந்நிலையில், காசாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பாடசாலை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பாடசாலை வளாகத்திற்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி பாடசாலை மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 19 பெண்கள், குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லெபனானில் இரண்டு நாட்களாகத் தொடரும் மனித வேட்டை! உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இஸ்ரேலிய உளவு அமைப்பு!!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |