ரபா நகரத்தில் இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்
எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலினால் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி தொடக்கம் கடுமையான போர் இடம்பெற்று வருகிறது.
குறித்த போரினால் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டுள்ளனர்.
தாக்குதல்
அதன் காரணமாக காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், ரபா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |