இந்தியாவை ஆத்திரமூட்டும் சீனக்கப்பல்கள்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்
இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு இலங்கை ஒருபோதும் அனுமதியளிக்காது என சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகத்திற்கு ஒன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சீன கப்பல்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பை மனதில் கொண்டிருப்போம், இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைளிற்கு அனுமதியளிக்கமாட்டோம் என தெரிவித்துள்ளோம்.
இலங்கைக்கு வந்து சென்ற சீன கப்பல்கள் கடல் ஆராய்ச்சியுடன் தொடர்புபட்டவை. அதன் காரணமாக அவற்றிற்கு நாங்கள் அனுமதி வழங்கியுள்ளோம்.
ரணிலின் நிலைப்பாடு
இந்த ஆண்டு இலங்கையின் திறனை கட்டியெழுப்புவது என நாங்கள் தீர்மானித்துள்ளோம். ஏனையவர்களுடன் ஒத்துழைப்பதன் மூலம் இலங்கை தனது சொந்ததிறனை கட்டியெழுப்பவேண்டும் என நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இதன் காரணமாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நீரியல் விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கு கப்பல்கள் வரமுடியாது.
ஆனால் வழமையான விஜயத்தினை மேற்கொள்ளும் கடற்படை கப்பல்களாகயிருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்குவோம். என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |