லெபனானில் நடந்த பேஜர் தாக்குதல்: அதிர்ச்சியளித்த நெதன்யாகுவின் அறிவிப்பு
ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் மீதான பேஜர் தாக்குதலுக்கு அனுமதி கொடுத்ததை இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஒப்புக்கொண்டுள்ளார்.
பலஸ்தீனத்தின் (Palestine) காசா (Gaza) நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் (Hamas) அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மோதல் ஆரம்பமானது.
பேஜர் தாக்குதல்
குறித்த தாக்குதலில் 40 பேர்கள் கொல்லப்பட்டதுடன் 3,000 பேர்கள் காயங்களுடன் தப்பினர். இவர்கள் அனைவரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படையினர்.
பேஜர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தாலும், இதுவரை வெளிப்படையாக எவரும் உறுதி செய்யவில்லை.
ஆனால் தற்போது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை உறுதி செய்துள்ளார். ஞாயிறன்று பேசிய அவர், லெபனானில் ஹிஸ்புல்லா படைகள் மீதான பேஜர் தாக்குதலுக்கு தாம் ஒப்புதல் அளித்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அத்துமீறல்
செப்டம்பர் மாதம் 17 மற்றும் 18ம் திகதிகளில் ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்திய பேஜர்கள் திடீரென்று வெடிக்கத் தொடங்கின. இதனையடுத்து, இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானும் ஹிஸ்புல்லாவும் குற்றஞ்சாட்டின.
காயமடைந்த ஹிஸ்புல்லா உறுப்பினர்களில் சிலர் கைவிரல்களை இழந்ததாகவும், சிலர் கண்பார்வையை இழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஹிஸ்புல்லா படைகள்
இந்த தாக்குதல் சம்பவங்களை அதன் தகவல் தொடர்பு அமைப்பின் மீதான இஸ்ரேலின் அத்துமீறல் என்று கூறியதுடன், தாக்குதலுக்கு பழிவாங்குவதாகவும் ஹிஸ்புல்லா படைகள் உறுதியளித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |