காசாவில் மருத்துவ நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு ஊழியர்கள் பரிதாப பலி
காசாவின் மருத்துவ நிலையமொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தமது அமைப்பைச் சேர்ந்த இரு ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) தெரிவித்துள்ளது.
நேற்று (28) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், குறித்த மருத்துவ நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளர்களாகப் பணியாற்றிய இருவர் உயிரிழந்துள்ளதாக MSF அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அஹ்மத் அபூ ஹசிரா மற்றும் மொஅஸ் சோப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருத்துவ நிலையம் நேரடித் தாக்குதல்
எனினும், உயிரிழந்த இருவரும் ஹமாஸ் அமைப்பின் பயங்கரவாதிகள் என இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) குற்றஞ்சாட்டியுள்ளது.

அவர்களில் ஒருவர் ஹமாஸின் பீரங்கிப் பிரிவுத் தளபதி எனவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள MSF, தனது மருத்துவ நிலையம் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |