மாவீரர் நாள் வளைவு விவகாரம்: வலி. தெற்கு பிரதேச சபைத் தவிசாளரிடம் விசாரணை!
Jaffna
Sri Lanka Police Investigation
Maaveerar Naal
By Theepan
மாவீரர் நாள் வளைவு விவகாரம் தொடர்பில் யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஷிடம் காவல்துறையினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் பிரதேச சபையில் வைத்து குறித்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உதவி காவல்துறை அத்தியட்சகர், மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, சுன்னாகம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் அங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிரதேச சபையின் சட்டத்தரணி சிவலிங்கம் ரிசிகேசனும் பிரசன்னமாகியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி