அடங்காத இஸ்ரேல் அகதிகள் முகாம் மீது தாக்குதல்: 33 பேர் பலி
காசாவின் (Gaza) மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு தாக்குதல்
இந்நிலையில் நேற்று மாலை வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா (Jabalia) அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் நடாத்தியது.
தாக்குதலில் முகாமில் தஞ்சமடைந்திருந்த 33 பலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், உயிரிழந்தவர்களில் 21 பேர் பெண்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உயிரிழப்பு எண்ணிக்கை
மேலும் இடிபாடுகளுக்கிடையில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 50 வரை உயரும் என்று அஞ்சப்படுவதுடன், இந்த தாக்குதலில் குழந்தைகள் 85 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 42,500 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 99,௦௦௦ பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
காசாவில் மொத்தம் 08 பெரிய அகதி முகாம்கள் உள்ளதுடன் அவற்றுள் மிகப்பெரியது ஜபாலியா அகதிகள் முகாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |