ஆதித்யா எல் 1 விண்கலம் : இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
இந்திய வெண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் லாக்ரேஞ்சியன் புள்ளியை நெருங்கி வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆதித்யா விண்கலம் எப்போது சூரியனின் எல் 1 புள்ளியில் நிலை நிறுத்தப்படும் என்ற திகதியையும் அவர் அறிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர்
இஸ்ரோ தலைவர் சோம்நாத் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆதித்யா விண்கலம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை நெருங்கி வருவதாக தெரிவித்தார் மேலும் ஆதித்யா விண்கலம் சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிய பயணத்தின் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சூரியனின் எல்-1 சுற்றுப்பாதையில்
ஆதித்யா விண்கலம் சூரியனின் எல்-1 சுற்றுப்பாதையில் வரும் ஜனவரி 7 ஆம் திகதி நிலை நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
Halo Orbit எனும் சூரிய ஒளிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் ஆதித்யா விண்கலம் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என்றும் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |