வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் எரிபொருள் விலை அதிகரிப்பு
srilanka
history
increase
fuelr price
By Sumithiran
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இரண்டாவது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை சமர்ப்பித்துள்ளது.
பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுகட்ட விலை அதிகரிப்பு அவசியமானது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒரு லீட்டர் பெற்றோல் ரூ.177க்கு விற்பனை செய்வதால், அதை ரூ.192 ஆக உயர்த்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது ஒரு லீட்டர் டீசல் 121 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதால், அதை 169 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இந்த விலை உயர்வு அங்கீகரிக்கப்பட்டால், வரலாற்றில் பெற்றோல், டீசல் விலை அதிகம் விற்பனையாகும் விலையாக இது இருக்கும்.
