வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தமிழரசுக் கட்சியின் (ITAK) வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள வாடி வீட்டில் இன்று (27) இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வு கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இதன்போது வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இந்த நிகழ்வில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் இன்றையதினம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
