தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் : வெளியான அறிவிப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க (R.M.A.L. Rathnayake) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வேட்பு மனு கையளிப்பு
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி சபைகளின் தபால் வாக்குச் சீட்டுகளின் விநியோகம் 2025.04.07 ஆம் திகதி ஒவ்வொரு மாவட்ட செயலகத்திலும் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு இன்று (27) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
