அரசியல் கைதிகள் விடுதலை : ஜனாதிபதியிடம் வலியுறுத்திய இலங்கை தமிழ் அரசுக்கட்சி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சிறிநேசன் எம்.பி,தற்போது அரசியல் கைதிகள் என எட்டுபேர் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் நீண்டகாலமாக சிறையில் இருப்பதால் அவர்களை விடுவிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்றம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலைப் பகுதியில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதைத் தடுக்க இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உறுதி செய்வது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |