இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு

Ilankai Tamil Arasu Kachchi M. A. Sumanthiran Shanakiyan Rasamanickam Local government Election
By Thulsi Mar 09, 2025 02:06 AM GMT
Report

இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthran ) தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நேற்று (08) மாலை கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இலங்கை தமிழரசுக்கட்சியானது இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

நாளை வவுனியாவில் கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு

நாளை வவுனியாவில் கூடவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 

இங்கு கருத்து தெரிவித்த கட்சியின் பொதுச்செயலாளர், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கூட்டம் நடைபெற்றது.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

இந்த கூட்டத்தில் பிரதானமாக ஒவ்வொரு பிரதேசமாக அலசி ஆராய்ந்து என்ன முறையிலான அணுகு முறையில் நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்தவரையில் நாங்கள் போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடலாம் என்று நம்பிக்கையோடு எங்களுடைய உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். வருகின்ற வாரத்திற்குள் நாங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விடுவதாக தீர்மானித்திருக்கின்றோம்.

ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவது வேண்டாம் என்று கூட்டத்தின் போது அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அந்த முயற்சி முடிவடைந்து விட்டது என்பது தான் என்னுடைய கருத்து. 

அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது

எங்களுடைய கட்சியின் தலைவர் அதற்கான ஒரு முயற்சியை முன்னெடுத்திருந்தார். ஆனால் எங்களுடன் பங்காளிகளாக இருந்த கட்சிகள் தாங்கள் வேறு ஒரு கூட்டணியாக இணைந்து இருக்கின்றோம் என்று எங்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

ஆகையினால் ஒரு அணியாக ஒன்று சேர்ந்து போட்டியிடுவது என்பது இப்போது முடியாத விடயம் தமிழரசு கட்சி தனி அணியாக போட்டியிடும் தேர்தலுக்குப் பின்னர் நிர்வாகங்களை அமைக்கின்ற விடயத்தில் ஒவ்வொரு கட்சிகளுடன் இணைந்து தான் நிர்வாகத்தை அமைக்க வேண்டியதாக இருக்கும்.

அதுதான் உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முறைமை ஆகையினால் அதை குறித்து தொடர்ச்சியாக பல கட்சிகளோடும் பேசிக் கொண்டு இருக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு ஊடகத்தின் நேர்காணல் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், பல கருத்துக்களை கூறியிருக்கின்றார் என கூறுகின்றீர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விளக்கங்கள் கூற முடியாது.

சில கருத்துக்கள் அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்ஃ சில அத்துமீறல்கள் இடம்பெற்று இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றார். வேறு சில விடயங்களை மூடி மறைத்து இருக்கின்றார். ஆகையினால் ஒட்டுமொத்தமாக அதைக் குறித்து என்னால் கருத்து கூற முடியாது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல்

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற தேர்வு குழு விசாரணை செய்தபோது அதற்கு முன்பாக சாட்சியம் கொடுத்திருந்தார். அதிலும் அவர் அரசாங்கத்தின் தலைவராக அல்லது பிரதம மந்திரியாக நான் என்னுடைய பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறியவர்.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

அன்றும் அந்த நேர்காணலில் அது தொடர்பாக ஒரு இது வார்த்தைகளை அவரது வாயிலிருந்து வந்ததை நான் அவதானித்தேன். ஆனால் ஜனாதிபதி ஆணைக்குழு அவர் ஓரம் கட்டப்பட்டிருந்தாலும் கூட அதனை அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவித்திருக்க வேண்டும் என்கின்ற குறையினை அவர்கள் கண்டிருக்கின்றார்கள் அது நியாயமான ஒரு குறை.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் முற்றும் மாறுபட்ட நிலைமையினையே எதிர்பார்க்கின்றோம். தேசிய மக்கள் சக்திக்கு ஒரு அலையோடு மக்கள் வாக்களித்ததை நாங்கள் கண்டோம்.

தமிழ் மக்களது அபிலாசைகள் 

ஆனால் இந்த ஒரு சில மாதங்களுக்குள் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களது அபிலாசைகள் தொடர்பான விடயங்களில் எந்தவித முன்னேற்றத்தையும் காட்டவில்லை ஒரு சறுக்கல் போக்கையே காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை காணமுடிகின்றது.

இடைநிறுத்தப்பட்ட பேச்சு..! தேர்தலில் தமிழரசுக் கட்சியின் நிலை - சுமந்திரனின் அறிவிப்பு | Itak Party Contest Local Council Elections

இதனை மக்களும் நன்றாக அறிந்திருக்கின்றார்கள் அதற்கு மேல் அதிகமாக மத்திய அரசாங்கம் அவர்களிடம் இருந்தாலும் இருக்கட்டும் ஆனால் எங்களுடைய ஊர் ஆட்சி உள்ளூர் ஆட்சி எங்களோடு இருக்க வேண்டும் என்பதை எங்களுடைய மக்கள் முனைப்பாக இருக்கின்றார்கள்.

தமிழரசு கட்சி தனித்துப் போட்டியிடுகின்றது. நான் ஏற்கனவே கூறியது போன்று ஒரு கட்சி தனியாக நிர்வாகத்தை ஆட்சி அமைப்பது என்பது சாத்தியப்பாடு குறைவு.

இது தேர்தல் முறைமைலி இருக்கின்ற விடயம். ஆகையினால் தேர்தலில் பிற்பாடு நாங்கள் மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து தான் பல இடங்களில் நிர்வாகங்களை அமைக்க வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கின்றது. 

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் நாடாளுமன்ற குழு பேச்சாளருமான ஞா.சிறிநேசன்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்,வட்டாரக்கிளை தலைவர்கள், மாவட்ட கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமருக்கு எதிராக வழக்கு: சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னணி

பிரதமருக்கு எதிராக வழக்கு: சபையில் பகிரங்கப்படுத்தப்பட்ட பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்