தமிழரசுக்கட்சியை உடைக்க புலம்பெயர் நாடுகளில் சதி: சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு
இலங்கை தமிழரசு கட்சியை உடைக்க வேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் இணைந்து சதிகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) - களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் மற்றும் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோருக்கும் இடையில் இன்று (14) நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் இலங்கை தமிழரசுக்கட்சி சிறந்த வேட்பாளர் பட்டியலை முன்னிறுத்தியுள்ளோம்.
தமிழரசுக்கட்சிக்கு 4 ஆசனங்களை பெற வேண்டுமென்பதே எமது நோக்கமாகும். தமிழரசுக்கட்சியில் மட்டும் தான் இம்முறை சிறந்த வேட்பாளர்கள் உள்ளனர்.
அந்தவகையில் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை இலங்கை தமிழரசு கட்சிக்கு தருவதனூடாக அநுர குமார திசாநாயக்கவிற்கு நாம் ஒரு செய்தியை சொல்ல வேண்டும்.
இந்த நாட்டில் அரசியல் உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்லாயிரங்கணக்காணோர் தங்களது உயிரை துறந்தார்கள்” என்றார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |