இத்தாலிக்கு வர மறுத்த இலங்கை மனைவி - கணவர் தூக்கிட்டு தற்கொலை
இத்தாலிக்கு வர மனைவி மறுத்ததால், 26 வயதுடைய இலங்கைக் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இலங்கையின் நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் 26 வயதுடைய மனைவி பிபிலதெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.
வெளிநாடு வரமாட்டேன்
இவர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்ததாகவும், இத்தாலிக்கு வருமாறு கணவர் பலமுறை மனைவியிடம் கூறியதாகவும் எனினும் அவர் மறுத்துவிட்டதாகவும் இத்தாலியில் வசிக்கும் உயிரிழந்தவரின் சகோதரர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து விரக்தியில் 26 வயதுடைய பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை உயிரிழந்தவரின் மனைவி, கணவனின் உடலை ஏற்க மறுத்ததால், இறந்தவரின் சகோதரரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
