இலங்கை வாழ் ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிக்குமாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் விடுத்த கோரிக்கையின் பிரகாரம், ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்துக் கலாசார திணைகளத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்துக் கலாசார அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது இந்துக் கலாசார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
அதில் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் சபரிமலை செல்லும் ஐயப்பன் யாத்திரையை இலங்கை அரசால் புனித யாத்திரையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, இது தொடர்பான பல ஆவணங்கள் கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை செந்தில் தொண்டமான் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, இந்துக் கலாசார திணைகளத்திற்கு, சபரிமலை ஐயப்பன் யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.