இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இரு வீரர்கள்: வெளியாகியுள்ள காரணம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகளில் இருந்தே ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் நான்காவது நாளில் ஜடேஜாவுக்கு தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளது, அதே சமயம் ராகுல் காயம் காரணமாக வலி இருப்பதாக புகார் செய்ததாக பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய வீரர்கள்
இந்நிலையில் காயம் காரணமாக வெளியேறிய ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுலுக்கு பதிலாக புதிய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இவர்களுக்கு சர்பராஸ் கான் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் சௌரப் குமார் மற்றும் ஆல்-ரவுண்டர் வோஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐதராபாத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததை அடுத்து உலக சாம்பியன்சிப் போட்டி அட்டவணையில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா , சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (டபிள்யூ.கே), துருவ் ஜூரல் (டபிள்யூ.கே), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (விசி), அவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வோசிங்டன் சுந்தர், சவுரப் குமார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |