இந்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: புதிய வரலாறு படைத்த தமிழக வீரர்..!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ரவிசந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.
இன்று ஐதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து அணிகளின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் அமர்வில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.
புதிய சாதனை
இந்நிலையில், அவர் 12வது ஓவரின் ஐந்தாவது பந்தில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டை அவுட் செய்து தனது 149வது விக்கெட்டை எடுத்தார்.
மேலும் 16வது ஓவரின் முதல் பந்தில் சேக் க்ராவ்லியை அவுட் செய்து தனது 150வது விக்கெட்டை எடுத்தார். இதற்கமைய, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய மற்றும் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர்களான நாதன் லயன் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோருக்குப் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் அஸ்வின் ஆவார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் 5 முன்னணி விக்கெட்டுகள் எடுத்தவர்கள்
பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா
நாதன் லயன் ஆஸ்திரேலியா
ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியா
மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா
ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து
இந்தியாவுக்காக 30 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் , அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இந்தியாவுக்காக 500 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் ஆவதற்கு இன்னும் எட்டு விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |