வட்டுக்கோட்டையில் உயிரிழந்த இளைஞன்: கவலை வெளியிட்டுள்ள சுவிஸர்லாந்து
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் மரணம் குறித்து இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சுவிஸர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக தனது எக்ஸ்(டுவிட்டர் ) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
சித்தங்கேணி என்னும் இடத்தை சேர்ந்த 26 வயதுடைய அலெக்ஸ் என்ற இளைஞன் திருட்டு சம்பவத்தில் கைதாகி வட்டுக்கோட்டை காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் தாக்குதலினால் குறித்த இளைஞன் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் நீதிமன்ற அனுமதியுடன் யாழ்ப்பாண காவல்துறையினரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் வாதிகளும் மக்களும் தொடர்ந்து குரல் கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
??is deeply concerned about the death of a youth after he was in police custody. Any case of alleged custodial mistreatment should be impartially investigated by the ?? authorities.
— Ambassador Siri Walt (@SwissAmbLKA) November 22, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |