யாழில் துயர சம்பவம்..! முன்னணி பாடசாலை உயர்தர மாணவி பரிதாப மரணம்
Cancer
Jaffna
Hospitals in Sri Lanka
By Thulsi
யாழை சேர்ந்த பாடசாலை மாணவி மகரகம (Maharagama) அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை மாணவியான இவர் நேற்று (07.07.2025) மாலை 5:00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தப்புற்று நோய்
உயிரிழந்த மாணவி இரத்தப்புற்று நோய் காரணமாக மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுகந்தன் பூமிகா என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவியின் மரணம் கரணவாய் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
