யாழில் இன்றும் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டுக்குழு அட்டகாசம்
யாழ்ப்பாணத்தில் அண்மைய சில நாட்களாக வாள்வெட்டுக்குழுவினரின் அட்டகாசம் தலை தூக்கியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் ஸ்ரூடியோ ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனத் தெரிவித்து மூவரை பொலிஸார் கைது செய்ததுடன் மேலும் 16 பேரை தேடிவருகின்றனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்று மாலை வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. கொடிகாமம் கெற்பேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் இன்று மாலை வாள்களுடன் புகுந்த கும்பல் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி விட்டு வீட்டின் மீதும் , வீட்டினை சுற்றி இருந்த வேலிகள் மீது தாக்குதல் நடாத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வீட்டில் இருந்தோரிடம் முறைப்பாட்டினை பெற்று அதனடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
