யாழில் வீட்டிற்கு முன்னால் புல்லு பிடுங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தில் வீட்டிற்கு முன்பாக புல்லுப் பிடுங்கி கொண்டு இருந்த குடும்பஸ்தர் வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அச்சுவேலி வல்லை பருத்தித்துறை பிரதான வீதியில், இன்று(27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்தார்.
வேக கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம்
வேக கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியதுடன் அங்கிருந்த இரண்டு மின்கம்பங்களையும் மோதி சேதப்படுத்தியது. விபத்தின் போது அருகில் இருந்த ஒருவரும் காயமடைந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்
கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதுடன் வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

