சர்ச்சையை ஏற்படுத்திய முதல்வரின் “காவலர்படை” - இறுதியாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி
தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ள யாழ்.மாநகர சபைபையின் புதிய காவலர் படை விவகாரம், தென்னிலங்கையில் பெரும் பரபரப்பான ஒரு சூழ்நிலையினை தோற்வித்துள்ளது. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்ட போலியான விடயங்களினால் யாழ்.மாநகர சபை முதல்வரான விஸ்வலிங்கம் மணிவண்ணன் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
நேற்று இரவு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்ட நிலையில் வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றார்.
மணிவண்ணன் கைது செய்யப்படவற்கு சற்று முன்னர் ஐ.பி.சி தமிழ் ஊடகத்தில் ஒளிபரப்பாகும் “தீர்ப்பாயம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த காவலர்படை உருவாக்கப்பட்டதன் காரணத்தினை அவர் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்கள் எவ்வாறு பார்த்துள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்த விடயம் காணொளியில்,