யாழில் ஏ.ரி.எம். அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு :சிக்கினர் பெண் உட்பட நால்வர்
வீடொன்றில் இருந்து 95 ஆயிரம் ரூபா பணம் மற்றும் தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை என்பவற்றைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கோப்பாய் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு
ஓய்வுபெற்ற கிராம அலுவலர் ஒருவரின் வீட்டிலேயே இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் அவர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் அந்த வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். தொடர் விசாரணைகளிலும், பாதுகாப்புக் கமரா பதிவுகளின் அடிப்படையிலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!
ஏரிஎம் அட்டையில் பணம் எடுத்து மதுபானம் கொள்வனவு
கைது செய்யப்பட்ட மூவரும் திருடப்பட்ட தன்னியக்கப் பணப்பரி மாற்ற அட்டையைக் கொண்டு 20 ஆயிரம் ரூபாவை எடுத்து மதுபானம் கொள்வனவு செய்துள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது அவர்களைவிளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கோப்பாய் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 7 மணி நேரம் முன்