யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

Jaffna Indian Army Gun Shooting
By Sumithiran Mar 24, 2025 09:59 PM GMT
Report

யாழ்ப்பாணத்தில் (jaffna)1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால்(indian army) கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த உடல்கள் நீதிமன்ற அனுமதிபெற்று மீள எடுக்கப்பட்டு நேற்று(23) சமய முறைப்படி தகனக் கிரியைகள் நடாத்தப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் நோக்கி மேற்கொண்ட படை நடவடிக்கைகயில், கண்டி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்த தாயும் அவரது மகனும் இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

வீட்டு வளவில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள்

உயிரிழந்தவர்களுக்கு சமய முறைப்படி கிரியைகள் செய்து தகனம் செய்வதற்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், கணவர் வேறு வழியின்றி தனது மனைவியினதும், மகனினதும் உடலை வீட்டுவளவிலேயே அடக்கம் செய்துள்ளார்.

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! | Mother And Son Killed By Indian Army In Jaffna

பின்னர் அங்கு கல்லறை ஒன்றைக் கட்டிவிட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் ஏனைய பிள்ளைகளுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

சிறிலங்கா படைத் தளபதிகள் மற்றும் கருணாவிற்கு பிரிட்டன் அதிரடி தடை..!

சிறிலங்கா படைத் தளபதிகள் மற்றும் கருணாவிற்கு பிரிட்டன் அதிரடி தடை..!

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனது ஏனைய பிள்ளைகளுக்கு அவர் தெரிவித்திருந்ததுடன், மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு சமய முறைப்படி இறுதிக் கிரியைகள் செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்று அனுமதி

அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக நாடு திரும்பிய ஏனைய பிள்ளைகள் தாய் மற்றும் சகோதரனின் உடல்களை மீளத் தோண்டியெடுத்து கிரியைகள் செய்வதற்காக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியிருந்தனர்.

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்! | Mother And Son Killed By Indian Army In Jaffna

நீதிமன்று அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு இந்து சமயக் கிரியைகள் நடாத்தப்பட்டு அவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளன. 

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் அதிரடி கைது

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் அதிரடி கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026