சுமார் 1,600 யாழ்ப்பாணத்து தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு! சவேந்திர சில்வா
sri lanka
jaffna
shavendra silva
meeting
tamil youths
By Shalini
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 1,600 தமிழ் இளைஞர்கள் மூன்று மாத காலத்திற்குள் இலங்கை ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறினார்.
யாழ்ப்பாணத் தலைமையகத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் இதை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை இன்னும் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில், தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் சேர முன்வந்திருப்பது மிகப்பெரிய வெற்றியாகும்.
இதேவேளை, பொது மக்களுக்கு தேவையான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை வழங்குவதற்கு யாழ். மாவட்டத்தில் இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் செய்த சேவையை இராணுவ தளபதி பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்