யாழ் விசேட பொலிஸ் அணிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்!
சுன்னாகத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்களை எடுத்து சென்ற ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையின் கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியின் கீழ் செயற்படும் விசேட பொலிஸ் அணிக்கு கிடைத்த ரகசிய தகவல் படி சுன்னாகம் மருதனார்மட பகுதியில் சொகுசு வாகனத்தில் முறைகேடான விதத்தில் கடத்தி வரப்பட்ட சாராயபோத்தல் 240 பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இவற்றை கடத்தி வந்த ஒருவரையும் வாகனத்தையும் பொலிசார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அதிகரிப்பு காரணமாக பயணத் தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடுவோர் பொலிசாரால் கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


