யாழில் 58 பேர் உட்பட வடக்கில் 74 தொற்றாளர்கள் கண்டறிவு
covid
jaffna
patient
By Vanan
யாழ். மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வியாழக்கிழமை (மே 13) கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 853 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும், வவுனியா மாவட்டத்தில் 2 பேரும், மன்னாரில் இருவரும் என வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்
மைத்திரியின் உத்தரவால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கில் இருவர் மட்டுமே கைது! ஹேமசிறியின் பரபரப்பு வாக்குமூலம்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்