யாழ்ப்பாணத்தில் மூவர் கொரோனாவுக்கு பலி
corona
jaffna
death
By Vanan
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை மேலும் மூவர் கொவிட் -19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்புத் துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும், உடுப்பிட்டி கம்பர்மலையைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட் -19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 221ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி