யாழில் கடந்த 24 மணித்தியாலத்தில் 370 பேருக்கு கொரோனா
corona
sri lanka
jaffna
people
By Shalini
யாழ் மாவட்டத்தில் இன்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணி நேரத்தில் 370 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.
அவர்களில் 31 பேர் பிசிஆர் பரிசோதனையிலும் 339 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.
- சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 133 பேரும்,
- கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 66 பேரும்,
- யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 27 பேரும்
- கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 20 பேரும்
- சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும்
- ஊர்காவற்றுறையில் 9 பேரும்
- நல்லூரில் 26 பேரும்
- சண்டிலிப்பாயில் 7 பேரும்
- உடுவிலில் 35 பேரும்
- தெல்லிப்பழையில் 7 பேரும்
- வேலணையில் 6 பேரும்
- மருதங்கேணியில் 14 பேரும்
காரைநகரில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இன்று மாலை வரை 13 ஆயிரத்து 310 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 265 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 161 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 739 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்