யாழ். வடமராட்சிப் பகுதி முடக்கம் தொடர்பில் அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Jaffna Corona Virus Northern Province
By Vasanth Jan 06, 2021 02:04 AM GMT
Report

  யாழ் மாவட்ட நுழைவிடங்களில் துரித அண்டிஜன் பரிசோதனை விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் தற்போதைய நிலையில் நேற்று யாழில் 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள்.

கடந்த இரண்டு நாட்களாக தொற்று உறுதி செய்யப்படாத நிலையில் நேற்றைய பி.சி.ஆர் பரிசோதனையில் 7 நபர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். இதில் 6 பேர் ஏற்கனவே மருதனார்மடம் தொற்றாளர்களுடன் தொடர்பினை பேணி தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பருத்தித்துறையில் மேலும் ஒருவர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

அவரைப் பற்றிய தகவல்கள் சுகாதாரப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அதற்குரிய பின்னணியும் ஆராயப்பட்டு வருகின்றது. இந்த அடிப்படையிலே யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானோர் அக்டோபர் மாதத்திற்கு பின்னர் 168 ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.

அந்த நிலையை தற்பொழுது சுய தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது. 1041 குடும்பங்களைச் சேர்ந்த 2807 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நேற்று உறுதி செய்யப் பட்டவர்களில் தெல்லிப்பளையைச் சேர்ந்த மூவரும் சண்டிலிப்பாயை சேர்ந்த இருவரும் மானிப்பாயை சேர்ந்த ஒருவரும் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவருமாக 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது யாழ் மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை சற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணப்படுகின்றது. இருந்த போதிலும் தொடர்ச்சியாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் குறித்த நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம். எனினும் அதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் நமது மாவட்டத்தில் தொற்று நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் மேலும் எதிர்வரும் இரண்டு வாரங்களும் மிகவும் அபாயகரமான காலப்பகுதியாக இருக்கின்றது. ஆனால் சற்று விழிப்பாக இருந்து பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

தற்பொழுது அரசாங்கத்தினால் திரையரங்குகள் மற்றும் ஏனைய விடயங்களிலும் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முகமாக சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த நிலையிலே கூடுதலாக விழிப்பாக இருக்க வேண்டியதாகவுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. பாடசாலைகள் ஆரம்பிப்பது குறித்து கல்வித்திணைக்களம் கல்வி அமைச்சு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் ஊடாக சிறப்பான ஒழுங்கினை ஏற்படுத்தியுள்ளார்கள்.

பெற்றோரும் குறித்த விடயம் தொடர்பில் விழிப்பாக செயற்பட்டு பாடசாலைகள் ஆரம்பிக்கும் போதும் பெற்றோர் மற்றும் பாடசாலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் குறித்த விடயங்கள் தொடர்பில் மிகவும் விழிப்பாக செயற்படுவதன் மூலம் குறித்த கட்டுப்பாட்டினை தொடர்ச்சியாக பேணமுடியும். இந்த நடைமுறையானது சுகாதாரப் பகுதியினருடைய ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு கல்வியானது தாமதமின்றி கிடைக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.

மேலும் தனியார் கல்வி நிலையங்களை பொறுத்தவரை இந்த வாரத்தில் அரசினுடைய அறிவுறுத்தலுக்காக காத்திருக்கின்றோம். எனினும் முடிவு கிடைக்கும் வரை குறித்த நடைமுறை அமுலில் இருக்கும் அத்தோடு ஏனைய செயற்பாடுகளை நாம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுத்துவது மிகவும் முக்கியமானது.

யாழில் சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் அவற்றை மீள திறப்பதற்குரிய மாற்று ஒழுங்கு தொடர்பில் தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அந்த மாற்று ஒழுங்கின் அடிப்படையில் சந்தைகளை மீளதிறப்பதற்கு ஏற்பாடுகளை நாங்கள் மிக விரைவில் செயல்படுத்தவுள்ளோம். அதேவேளையில் போக்குவரத்து விடயத்திலும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டியுள்ளது.

அபாய வலயங்களுக்கு சென்று வருபவர்கள் தங்களுடைய விபரங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். அதே வேளையில் யாழ் மாவட்டத்தில் துரித அன்ரிஜன் பரிசோதனை செய்வதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்த முடிவு விரைவில் வடக்கு சுகாதார பிரிவால் அறிவிக்கப்பட உள்ளது. அதாவது யாழ் மாவட்டத்திற்குள் நுழையும் வாயில்களில் ஆனையிறவு மற்றும் சங்குப்பிட்டி போன்ற இடங்களில் துரித அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் நாட்களில் குறித்த அண்டியன் பரிசோதனையினை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. வடமராட்சி பிரதேசத்தில் ஒருவர் தொற்றுக்குள்ளாகியுள்ளனதால் சுகாதாரப் பிரிவு அவருடைய தரவுகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பின்னணி தொடர்பாக ஆராய்ந்த பின்னரே முடக்குவதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்க முடியும் எனினும் சுகாதாரப் பிரிவினராலேயே அந்த முடிவு அறிவிக்கப்படும் எனினும் தற்போதைய நிலையில் வடமராட்சிப் பிரதேசத்தினை முடக்குவது தொடர்பில் தீர்மானமில்லை எனவும் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024