சுயதனிமைப்படுத்தலில் இருக்கும் யாழ்.மேயர்- விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
srilanka
jaffna
pcr test
By Vasanth
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் விசேட அறிவித்தல் ஒன்றை இன்றைய தினம் விடுத்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளது.
குறித்த திருமண வைபவயில் தானும் கலந்து கொண்டமையினால் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ள அதே வேளை பி.சி.ஆர் பரிசோதனையும் செய்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் அறிவித்துள்ளார்.
எனவே தன்னோடு இந்த காலப் பகுதியில் தொடர்பு கொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறும் வி.மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு இன்றைய தினம் நடைபெற இருந்த மாநகர சபையின் விசேட அமர்வும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வி.மணிவண்ணன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.