நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா! அடுத்த நடவடிக்கைக்கு தயாராகும் காவல்துறை
புதிய இணைப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வுட்லர் தெரிவித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தி உள்ளடங்கலாக ஐவர் நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் ஒரு தமிழ் நாட்டவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 40 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உதவி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டவர்களுள் இஷாரா செவ்வந்தியும் ஒருவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 18 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தம்பதி ஒன்றும் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் இன்று (14.10.2025) வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் செவ்வந்தி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தலைமறைவாக இருந்த நிலையில் கைது
25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும் திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினரால் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐந்து சந்தேக நபர்கள் கைது
கைது செய்யப்பட்ட குழுவில் கம்பஹா மற்றும் நுகேகொடையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இஷாரா செவ்வந்தியுடன் சிக்கி யாழ் தம்பதி தலைநகர் காத்மாண்டுவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை நாளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
