விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்படிப்பட்டவர் - சரத் பொன்சேகா
Sri Lankan Tamils
Mahinda Rajapaksa
Sarath Fonseka
By Rakesh
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது எனக்குத் தனி மரியாதை உண்டு என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தனியான மரியாதை
அவர் மேலும் தெரிவித்ததாவது, பிரபாகரன் எமது எதிரணியாக இருந்தாலும், தப்பியோடாமல் இறுதி வரை சமரிட்டார்.
அதற்குரிய கௌரவத்தை அவருக்கு நான் வழங்கி வருகின்றேன். போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை பிரபாகரன் போரிட்டார்.
எனவே, இந்த விடயத்துக்காக முன்னாள் இராணுவத் தளபதி என்ற அடிப்படையில் பிரபாகரன் மீது எனக்கு எப்போதும் தனியான மரியாதை உள்ளது என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி