கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு: கொந்தளித்த சீமான்
கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு தமிழக காவல்துறையை அவமதிப்பது போல இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த உத்தரவு இன்று (13) நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல்
கரூரில் கடந்த மாதம் 27 திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் (Vijay) பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த அடிப்படையில் இன்று (13) சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மாநில அவமதிப்பு
மேலும் தெரிவித்த அவர், “நீதமன்றத்தின் இந்த உத்தரவானது ஒரு தேசிய அவமதிப்பு, மாநில அவமதிப்பு மற்றும் தமிழக காவல்துறையை அவமதிப்பதாகத்தான் நான் பாரக்கின்றேன்.
இந்த தொடர்பில் வழக்கு விசாரணையே ஆரம்பிக்கப்படாத பட்சத்தில் வழக்கு எதற்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
நேர்மையாளனுக்கு அழகு யார் வழக்கை விசாரித்தாலும் பயம் இல்லாமல் இருப்பது, அவ்வாறு இருப்பின் ஏன் பயம் ?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
