யாழில் அதிரடியாக 14 பேர் கைது
யாழில் (Jaffna) பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மண் அகழ்வு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மூன்று நாட்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ்.காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ண தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மணல்
இந்த சம்பவத்துடன் யாழில் சட்டவிரோத மணலுடன் வந்த கன்ரர் வாகனமொன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த நிலையில் யாழ் காவல்துறையினரால் குறித்த கன்ரர் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கை இன்று (13) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரியாலைப் பகுதி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக யாழ்ப்பாண பிரதான காவல்துறை பரிசோதகர் பாலித்த செனவிரட்னவினவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது பணிப்புரைக்கு அமைவாக குறித்த பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[N37QF4A ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



